BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழக சுற்றுலா பயணிகளின் நிலை என்ன? கவலையில் குடும்பத்தினர்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேபாள வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் பலி - மீட்புப் பணியில் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள்
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேபாளம் இந்துக்களின் ஆன்மீக சொர்க்கபுரியாக பார்க்கப்படுவது ஏன்? அங்கு என்ன இருக்கிறது?
இயற்கைப் பேரிடர்கள் நிறைந்த பகுதியாக இருப்பினும், இந்துக்கள் அதிகமாக ஆன்மீக சுற்றுலா செல்லும் இடமாக நேபாளம் இருப்பது ஏன்? அங்கு செல்வது எப்படி, கவனம் ஈர்க்கும் பகுதிகள் யாவை?
தண்ணீரை நின்றுகொண்டே குடிப்பது ஆபத்தா? மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன?
தண்ணீரை சரியாகக் குடிக்கும் முறை எது? நின்ற நிலையில் குடிப்பதால் உடலுக்கு ஆபத்தா? மருத்துவர்களின் அறிவுறுத்தல் என்ன?
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்திற்கு முன்பாக அவசியம் பார்க்க வேண்டிய மார்வெல் படங்கள்
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பாக மார்வெல் சினிமாடிக் யுனிவெர்ஸில் இதுவரை வெளியான படங்களில் எதையெல்லாம் ஒருவர் பார்த்திருக்க வேண்டும்?
காணொளி, 'திடீர்ன்னு ஒரு சத்தம்' - நேபாளத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பித்த தமிழர் விவரிக்கும் தகவல்கள், கால அளவு 1,02
'திடீர்ன்னு ஒரு சத்தம்' - நேபாளத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பித்த தமிழர் விவரிக்கும் தகவல்கள்
நேபாளம்: வெள்ளத்தின் பாதிப்புகளை காட்டும் 12 புகைப்படங்கள்
நேபாளம்: வெள்ளத்தின் பாதிப்புகளை காட்டும் 12 புகைப்படங்கள்
நேபாளம்: வெள்ளத்திற்கு முன்பும் - பின்பும் ஆற்றின் நிலையை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்
நேபாளத்தில் திரிசூலி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை, வெள்ளத்துக்கு முந்தைய மற்றும் அதற்குப் பிந்தைய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
டிரம்பின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள முடியும் என இரான் நம்புவது ஏன்?
அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளை “பொருளாதார டி-டே” என்று கூறுகிறது. ஆனால், இரான் தலைவர்கள் இதற்கு முன்பும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு சமாளித்துள்ளனர்.
டாக்ஸிக் விமர்சனம்: மற்றொரு 'கேஜிஎஃப்' வெற்றியை கொடுத்தாரா யாஷ்?
கேஜிஎப்ஃ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘டாக்ஸிக்’ படத்தின் மூலம் யஷ் மீண்டும் கதாநாயகனாக திரையில் தோன்றியுள்ளார்.
'ஜாக்கெட் திருடிவிட்டு சிங்கப்பூரை விட்டு சென்ற பிரிட்டன் நபர்' - 2 ஆண்டுகளுக்கு பிறகு கைதானது எப்படி?
சிங்கப்பூரின் விமான நிலைய ஷாப்பிங் மாலில் உள்ள ஒரு கடையில் இருந்து டெனிம் ஜாக்கெட்டை திருடியதாகக் கூறப்படும் பிரிட்டிஷ் நபர் மீது, அந்தச் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிய பிறகு சிங்கப்பூர் அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
அவைக்குறிப்பு என்பது என்ன? அதிலிருந்து நீக்கியவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் என்னவாகும்?
சட்டப்பேரவை நிகழ்வுகள் ரீல்ஸ்களாகப் பகிரப்படுவது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியது விவாதப் பொருளானது. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுக்கள் கூட ரீல்ஸ்களாகப் பகிரப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் இந்த விவகாரம் உரிமைக் குழுவிற்கு அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லார் கிப்பன்: வீடியோவில் விக்ரமுடன் இருந்த குரங்கு சட்ட விரோதமாக தமிழகம் கொண்டு வரப்பட்டதா? சர்ச்சை ஏன்?
அழிந்துவரும் விலங்கினப் பட்டியலில் உள்ள ‘லார் கிப்பன்’ வகை மனிதக் குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடும் காணொளி இணையத்தில் பரவி சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்தக் குரங்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதா அல்லது உரிய ஆவணங்களுடன் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்துத் தமிழ்நாடு வனத்துறையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பணியகமும் விசாரணை நடத்தி வருகின்றன. என்ன நடந்தது?
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
கூவம் ஆறு சாக்கடையாக மாறத் தொடங்கியது எப்போது? 60 ஆண்டுகால திட்டங்கள் கைகொடுக்காதது ஏன்?
படகு சவாரி செல்வது, குழந்தைகள் குளித்து மகிழ்வது ஆகியவற்றைச் சாத்தியப்படுத்தும் அளவுக்கு கூவம், அடையாறு நதிகளை மீட்டெடுக்க திட்டமிட்டு இருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்? சவால்கள் என்ன?
இந்தியாவுடன் மோதல் வெடித்தால் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் பற்றிய பார்வை
சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை சௌதி அரேபியாவின் மெக்காவில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதன்படி, இந்தியாவுடன் மோதல் ஏற்படும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் ஒரு பார்வை
சென்னையில் அதிகரிக்கும் 'கோ-லிவிங்' விடுதிகள்: எதிர்ப்புகள் எழுவது ஏன்?
சென்னை போன்ற பெருநகரங்களில் சமீப காலமாக ஆண், பெண் இருபாலரும் தங்கக்கூடிய கோ-லிவிங் விடுதிகள், தங்குமிடங்கள் பெருகி வருகின்றன. இதுகுறித்த இளைஞர்களின் பார்வை என்ன? மறுபுறம் எதிர்ப்புகள் எழுவது ஏன்?
குருவாயூர் கோயில், சிருங்கேரி மடத்திற்கு வாரி வழங்கிய திப்பு சுல்தான் மீது 'மத வெறியர்' முத்திரை விழுந்த கதை
திப்பு ஒரு கொடுங்கோலன், மத வெறியன் என 1784-வரை ஆங்கிலேயர்களால் சித்தரிக்கப்படவில்லை. இந்தியாவில் பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக எண்ணியிருந்த ஆங்கிலேயர்கள் திப்புவின் பிரெஞ்சுக்காரர்களுடனான தொடர்பால் அச்சுற்றனர். எனவே ஆங்கிலேயர்களுக்கு திப்புவே பிரதான எதிரியாகத் தெரிந்தார்.
எவரெஸ்டில் 30 ஆண்டாக உள்ள இந்தியர் உடலை கீழே கொண்டு வருவது ஏன் சவாலானது? குடும்பம் கூறுவது என்ன?
‘கிரீன் பூட்ஸ்’ என அழைக்கப்படும் ஒரு சடலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பனிப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகக் கிடக்கிறது. இப்போது, அவரது உடலை மீட்பதற்கான குழுவை இந்தியா தேடி வருகிறது.
'இன்னொரு கண்ணையும் பறிப்பதா?': எரிபொருள் குழாய் பதிக்க திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு - பிபிசி கள ஆய்வு
கோவை–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டி டோல்கேட் அருகே கடந்த ஜூலை 31-ஆம் தேதி விவசாயிகள் பலரும் நடத்திய போராட்டம் குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. எரிபொருள் குழாய் பதிக்கும் பணி, பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்த விவசாயிகள் மட்டும் போராடுவதன் பின்னணி என்ன?
எட்டப்பன் உண்மையில் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தாரா? முரண்பாடு குறித்த வரலாற்று பகுப்பாய்வு
சில நாட்களுக்கு முன்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'எட்டப்பன்' குறித்து பேசிய கருத்துகளும், அதற்கு எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சந்திர சைதன்யா அளித்த பதிலும், 'எட்டப்பன் வரலாறு' குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
கலப்பட உணவால் நம் உடலில் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து? 5 முக்கிய விஷயங்கள்
கடந்த சில நாட்களாக, உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை பல உணவு உற்பத்தி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதைப் பார்த்து வருகிறோம்.
சிங்கம், புலி இரண்டும் புல் தின்னுமா? வைரல் வீடியோவால் எழும் கேள்வியும் பதிலும்
"சிங்கம் பசியில் இருந்தாலும் புல்லைத் தின்னாது" என்ற பழமொழி பொய் போல் தெரிகிறது. ஜூனாகத் சக்கர்பாக் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கமும் புலியும் புல் சாப்பிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































