1872
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1872 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1872 MDCCCLXXII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1903 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2625 |
| அர்மீனிய நாட்காட்டி | 1321 ԹՎ ՌՅԻԱ |
| சீன நாட்காட்டி | 4568-4569 |
| எபிரேய நாட்காட்டி | 5631-5632 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1927-1928 1794-1795 4973-4974 |
| இரானிய நாட்காட்டி | 1250-1251 |
| இசுலாமிய நாட்காட்டி | 1288 – 1289 |
| சப்பானிய நாட்காட்டி | Meiji 5 (明治5年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 2122 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4205 |
1872 (MDCCCLXXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 1 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- மார்ச் 26 – கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
- ஜூன் 14 – கனடாவில் தொழிற்சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
- ஜூலை 3 – யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் அதிபராக வண. ஈ. பி. ஹேஸ்ரிங்ஸ் பதவியேற்றார்.
- செப்டம்பர் – யாழ்ப்பாண கத்தோலிக்க வாலிபர் அமைப்பு (The Jaffna Catholic Young Men's Association) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- நவம்பர் 9 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்ரன் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் நகரின் பெரும் பகுதி அழிக்கப்பட்டது.
- நவம்பர் 30 – முதலாவது அனைத்துலக காற்பந்தாட்டப் போட்டி ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது. ஸ்கொட்லாந்து 0 இங்கிலாந்து 0.
பிறப்புகள்
[தொகு]- ஆகத்து 15 – அரவிந்தர், இந்திய மெய்யியலாளர் (இ. 1950)
- செப்டம்பர் 5 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)